Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் ஹூதி தாக்குதல்கள்!

நவம்பர் 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யேமனில் நிலவிய முறைசாரா போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த பல வருடங்களில் சவூதி மண்ணில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மோதல் தரவுகள் கண்காணிப்பு அமைப்பின் (Acled) தகவல்களின்படி, ஜூலை 1 முதல் நவம்பர் 25 வரையிலான சுமார் ஐந்து மாத காலப்பகுதியில் சவூதி அரேபியா மீது 274 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சவூதி வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், குறைந்தது 41 தாக்குதல்கள் இலக்குகளைத் தாக்கியுள்ளன.

இதற்கு முன்னரான ஐந்து மாதங்களில் ஒரேயொரு தாக்குதல் மட்டுமே பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யேமன் எல்லையிலிருந்து 700 கிலோமீற்றருக்கும் அப்பால் உள்ள ரியாத் நகரத்தின் நிதி மாவட்டத்திலுள்ள சவூதியின் மிக உயரமான கட்டிடமான பொது முதலீட்டு நிதிய கோபுரம் (PIF Tower) மற்றும் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கோ (Aramco) கட்டிடம் ஆகியனவும் இம்மாதம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதில் 11 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்கள் காரணமாக ரியாத், மதீனா மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவிலியன் மற்றும் பொருளாதார இலக்குகள் மீதான இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள சவூதி அரசாங்கம், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அறிவித்துள்ளது.

மறுபுறம், யேமனிலும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.

செங்கடல் கரையோரப் பகுதிகளை ஹூதிகள் கைப்பற்றியுள்ள நிலையில், தாயிஸ் (Taiz) நகரைச் சுற்றியுள்ள முற்றுகையால் 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் இன்றித் தவிப்பதாக யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் யேமனில் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இம்மாதம் சனாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டதாக ஹூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி அமெரிக்காவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!
அடுத்த செய்தி ‘டிரெயின்’ டிரெய்லர் வெளியீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்க இராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது – ஈரான் எச்சரிக்கை

மே 26, 2026
உலகம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு!

அக்டோபர் 21, 2025
உலகம்

சுவிட்சர்லாந்தில் திடீர் வெடி விபத்து

ஜனவரி 1, 2026
உலகம்

இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் இந்திய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா!

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?