Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் சவால்

நவம்பர் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மூன்று பெருங்கடல்களை ஒட்டியுள்ள சுமார் 2 இலட்சத்து 43 ஆயிரம் கிலோமீற்றர் நீளமான கடற்கரையைப் பாதுகாப்பதில் புதிய சவால்கள் உருவாகியுள்ளன.

உலகின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட நாடாக விளங்கும் கனடாவிடம், கடலுக்கு அடியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உதவும் சுமார் 20 நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா ட்ரோன்கள் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கடல் இறைமையைப் பாதுகாப்பதற்கும், கடல் எல்லைகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும் குறுகிய காலத் தீர்வொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததாக, உள்நாட்டு ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதற்கான இடைக்காலத் தீர்வு ஒன்றுகூட இதுவரையில் தயாராகவில்லை என்பதை கனேடிய கடற்படையின் தளபதி
வைஸ் அட்மிரல் டான் சார்லிபோய்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், நீருக்கடியில் கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காகத் தொழில்துறையினருடன் கனேடிய கடற்படை தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருவதாகவும், இருப்பினும் எதிர்பார்க்கப்படும் தீர்வை இன்னும் எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் பல இடங்கள் போதிய அளவில் கண்காணிக்கப்படாமல் இருப்பதாகவும், புதிய ஆளில்லா நீருக்கடிக் கண்காணிப்பு அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் வரையில், கனடாவில் தயாரிக்கப்பட்ட நீருக்கடித் ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தக் கண்காணிப்புக் குறைபாட்டைச் சரிசெய்ய முடியுமா என்பது குறித்தும் கடற்படை ஆராய்ந்துள்ளது.

தற்போது கனேடிய கடற்படையிடம் உள்ள சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்கத் தயாரிப்பு நீருக்கடித் ட்ரோன்களில், கனேடிய நிறுவனமான Kraken Robotics உருவாக்கிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இந்த ட்ரோன்கள் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளைக் கண்டறிதல் மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. கடல் எல்லைகளைக் கண்காணிக்கும் பணிகளுக்கு அவை தற்போது பயன்படுத்தப்படுவதில்லை.

இதற்கிடையில், Kraken Robotics மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தளமாகக் கொண்ட Cellula Robotics ஆகிய கனேடிய நிறுவனங்கள் நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன.

இந்நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது கண்காணிப்பு அமைப்புகளை உலகின் பல்வேறு நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றன. இருப்பினும், அவற்றின் தொழில்நுட்பங்களை கனடா தனது கடல் பாதுகாப்புக்காக இதுவரையில் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி என்விடியாவின் கணக்கியல் சிக்கல்கள் குறித்து விசாரணை!
அடுத்த செய்தி கனடாவில் ரயில் மூலம் சட்டவிரோத புகையிலை கடத்தல் – மேற்கு மாகாணங்களில் புதிய தொழிற்சாலை இயங்குகிறதா?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கான அரசமுறைப் பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் மன்னர் சார்ள்ஸ்!

மே 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

கிராமப்புற குடியேற்றத் திட்டத்தை நிரந்தரமாக்கியது கனடா – 5,500 புதிய நிரந்தர வதிவிட வாய்ப்பு!

நவம்பர் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?