ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், கனடாவின் இரண்டு முக்கிய பொருளாதார மாகாணங்களான ஒன்ராறியோ மற்றும் கியூபெக் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மொன்றியலில் நடைபெற்ற Metropolitan Montreal வர்த்தக சபை நிகழ்வில் உரையாற்றிய அவர், இரு மாகாணங்களும் எரிசக்தி, பாதுகாப்புத் தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளை அகற்றுவதும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவுக்குள் மாகாணங்களுக்கு இடையே காணப்படும் வர்த்தகத் தடைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்ற விவாதம் தொடரும் நிலையில், டக் ஃபோர்டின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
