Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

”கனேடியப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா நீக்க வேண்டும் – கியூபெக் அரசு

ஏப்ரல் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவரும் பேச்சுக்கே இடமில்லை என்று கியூபெக்கின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் கியூபெக் மதுபானக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படுமா என்ற கேள்வியை, அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, கியூபெக்கின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

”கனேடிய உற்பத்திகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தக வரிகளை நீக்கும் வரை, அமெரிக்க மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்” என கியூபெக்கின் புதிய முதலமைச்சர் உறுதிபடக் கூறினார்.

கனடா தனது பொருளாதாரத்திற்கு அமெரிக்காவையே முழுமையாகச் சார்ந்துள்ளது என்றும், எனவே மதுபானங்கள் மீதான தடையை கனடா உடனே நீக்க வேண்டும் என்றும் அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கியூபெக் முதலமைச்சர் ஃப்ரெச்செட், கனடா என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது எனவும் மிரட்டல்களுக்குப் பயந்து சலுகைகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கியூபெக் மாகாணத்தைப் போலவே, ஒன்ராறியோ மாகாண முதலமைச்சர் டக் ஃபோர்டும் அமெரிக்க மதுபானங்களுக்குத் தனது மாகாணத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

அமெரிக்கா தனது பிடிவாதத்தைக் தளர்த்தி, வர்த்தக வரிகளை நீக்கினால் மட்டுமே அமெரிக்க மதுபானங்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் என்பதில் இரு மாகாணத் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறையில் உள்ள இந்தத் தடையால், கியூபெக் மக்கள் உள்நாட்டு மதுபானங்களைப் பயன்படுத்தும் பழக்கத்துக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கடந்த ஓராண்டில் கியூபெக் மாநிலத்தின் உள்நாட்டு மதுபான விற்பனை 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடைகளில் மீதமிருந்த அமெரிக்க மதுபானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் விற்கப்பட்டு, அந்த வருமானம் உணவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி Bill 96 சட்டத்தை முற்றிலும் ரத்து செய்யும் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளார் எரிக் துஹைம்
அடுத்த செய்தி முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண இடைத்தேர்தல்!

ஆகஸ்ட் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கிளாடியா ஐகோனோ கொலை வழக்கில் இரண்டு நபர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கனடா வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

அக்டோபர் 30, 2025
கியூபெக்

மான்ட்ரியல் நகரில் திடீரென நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்சேவை

பிப்ரவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?