Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

Bill 96 சட்டத்தை முற்றிலும் ரத்து செய்யும் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ளார் எரிக் துஹைம்

ஏப்ரல் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

”கியூபெக் மாநிலத்தின் சர்ச்சைக்குரிய மொழிச் சட்டமான Bill 96’ -இனை முற்றிலும் ரத்து செய்வோம்” என்ற தனது பழைய வாக்குறுதியிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் எரிக் துஹைம் (Éric Duhaime) பின்வாங்கியுள்ளார்.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கியூபெக் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இந்த பின்வாங்கும் தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, 2022 தேர்தலின் போது இந்தச் சட்டத்தை முழுமையாக ஒழிப்பதாகக் கூறி ஆங்கிலம் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரே தலைவர் இவராவார்.

ஆனால், தற்போது இந்த Bill 96’ சட்டத்தை முழுமையாக நீக்குவதற்குப் பதிலாக, அதில் உள்ள சில கடுமையான விதிகளை மட்டும் திருத்தம் (Amend) செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

புதிய குடியேறிகள் கனடா வந்து ஆறு மாதங்களுக்குள் பிரெஞ்சு மொழியைக் கற்க வேண்டும் என்ற கட்டாய நிலை, மற்றும் சிறு வணிகங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்வாகச் சுமைகள் போன்றவற்றைத் திருத்தப்போவதாக துஹைம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த Bill 96’ சட்டத்தை முழுமையாக ரத்து செய்வது தற்போதைய சூழலில் யதார்த்தமானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றாலும், அது சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிப்பதாகப் புகார்கள் உள்ளன.

குறிப்பாக, அரசாங்கம் நீதிமன்றத் தலையீடுகளைத் தவிர்க்க Notwithstanding Clause என்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவதைதுஹைம் விமர்சித்துள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதோடு ஆங்கிலம் பேசும் மக்களின் உரிமைகளையும் சமமாகப் பேணும் வகையில் சட்டத்திருத்தங்கள் அமையும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கியூபெக் மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்தத் திடீர் கொள்கை மாற்றம், அக்கட்சியை ஆதரித்த ஆங்கிலம் பேசும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலின் மேய்சனேவ் – ரோஸ்மாண்ட் மருத்துவமனையை நவீனமயமாக்க நடவடிக்கை
அடுத்த செய்தி ”கனேடியப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா நீக்க வேண்டும் – கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

நிறைவேற்றப்பட்ட போப் பிரான்சிஸின் இறுதி ஆசை.

டிசம்பர் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் “தளநிலையான” பாகுபாடே, ஆண் மாணவர்களின் கல்வித் தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் -பிரான்சுவா டேவிட்

ஏப்ரல் 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

முகமூடிகளுக்கு முழுத் தடை விதிக்கக் கோரிக்கை

செப்டம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

20வது ஆண்டு நிறைவை  கொண்டாடிய  ‘கியூபெக் சொலிடேர்’ கட்சி

பிப்ரவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?