Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்

ஜூலை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் செண்ட் லாரன்ஸ் ஆற்றில் (St. Lawrence River) இயந்திரக் கோளாறு காரணமாகத் தரைதட்டி, கிட்டத்தட்ட நான்கு வாரங்களாகச் சிக்கியிருந்த ‘ஒனேகோ ஒட்ரா‘ (Onego Otra) என்ற சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

இழுவைப்படகுகளின் (Tugboats) உதவியுடன் மீட்கப்பட்ட இக்கப்பல், ஆய்வுகளுக்காக அருகில் உள்ள துறைமுகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) நாட்டின் கொடியுடன் பயணித்த 146 மீட்டர் நீளமுடைய இந்த ஜெனரல் சரக்குக் கப்பல், கடந்த ஜூன் 30 ஆம் திகதி மொன்றியல் நகரிலிருந்து நியூ ஓர்லீன்ஸ் நோக்கிச் சென்றபோது, சுக்கான் (Rudder) பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மொன்றியலுக்கு வடகிழக்கே உள்ள கொன்றேகர் (Contrecoeur) பகுதியில் தரைதட்டியது.

கப்பலை மீட்பதற்காகக் கனடிய கடலோரக் காவல் படை மற்றும் ‘ஓசன் குரூப்’ (Ocean Group) நிறுவனத்தின் இழுவைப்படகுகள் இணைந்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டன.

முதல்கட்டமாக ஜூலை நடுப்பகுதியில் கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அதில் இருந்த சுமார் 2,720 மெட்ரிக் தொன் சரக்குகள் பிற படகுகளுக்கு மாற்றப்பட்டன.

முதல் மீட்பு முயற்சி தோல்வியில் முடிவடைந்த போதிலும், தொடர் முயற்சிகளின் பலனாக மூன்று சக்திவாய்ந்த இழுவைப்படகுகள் மூலம் கப்பல் மிதக்க வைக்கப்பட்டு, தற்போது மீட்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்
அடுத்த செய்தி உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

ஆகஸ்ட் 29, 2025
கியூபெக்

கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

டிசம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

ஜூலை 6, 2026
கியூபெக்

லோங்காய் நகர பொலிஸார் தொடர்பிலான விசாரணை ஆரம்பம்

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?