Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஜூலை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெல்ஜியத்தில் அமைந்துள்ள நேட்டோ (NATO) இராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரம் கண்டறியப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) இந்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

பெல்ஜியத்தின் ‘மொன்ஸ்’ (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் உயர்மட்ட இராணுவத் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சி ஊழியராக (intern) பணியாற்றியவேளையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தமை மற்றும் சர்வதேசக் குற்றவியல் அமைப்பொன்றில் உறுப்பினராக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜிய கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் விபரங்களை பெல்ஜிய அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் ‘நியூ வெஸ்ட்மின்ஸ்டர்’ நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடியப் பெண் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” எனக் குறிப்பிட்டார்.

சந்தேகநபரான அந்தப் பெண் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு முன்னர் கனடாவின் அரச நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் எதிலாவது பணியாற்றியுள்ளாரா என்பது குறித்து, நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பு மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் கனடாவின் பாதுகாப்புப் பரிசீலனை (Security Screening) மற்றும் சரிபார்ப்புச் செயன்முறைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

முந்தைய செய்தி செண்ட் லாரன்ஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஒனேகோ ஒட்ரா சரக்குக் கப்பல்
அடுத்த செய்தி தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு விசேட பாராட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கூட்டுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை திடீரென முடக்கிய அமெரிக்கா

மே 20, 2026
கனடாமுதன்மை செய்தி

இந்திய பிரதமர் மோடிக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு!

ஜூன் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் நடைபெறவுள்ள FIFA உலக கால்பந்து போட்டி

டிசம்பர் 7, 2025
கனடா

சஸ்கட்சுவானில் கோர விபத்து – 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?