கியூபெக் மாகாணத்தில் அவசரகால எச்சரிக்கை அமைப்பின் செயல்திறனைப் பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிற்பகல் 1.55 மணியளவில் இணக்கமான கையடக்கத் தொலைபேசிகளுக்கு அவசரகால எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு வழியாகவும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த Alert Ready அமைப்பு, இயற்கை அனர்த்தங்கள், காணாமல் போனவர்கள், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் மற்றும் ஏனைய அவசரநிலைகள் தொடர்பாக மக்களுக்கு உடனடியாகத் தகவல் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு திட்டமிட்ட சோதனை என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கைச் செய்தியைப் பெற்றால் பதற்றமடையத் தேவையில்லை என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
