பெருமளவிலான கஞ்சா கடத்தல் வழக்கில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட இரண்டு மொன்றியல்வாசிகள், மீண்டும் விசாரணையைச் சந்திக்க வேண்டும் என கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் வின்சென்ட் கொஸ்டான்டினோ மற்றும் ஜூசெப் அர்கோராசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து சுமார் 200 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற நீண்ட காலதாமதம் ஏற்பட்டதால், 2021-ஆம் ஆண்டில் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது.
ஆனால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்துள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், “விசாரணை தாமதத்திற்குத் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்களே காரணம்” எனக் கூறி, அவர்கள் இருவர் மீதும் மீண்டும் புதிய விசாரணையை நடத்த நேற்று உத்தரவிட்டது.
நீதிமன்றக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளால் ஏற்படும் தாமதத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


