வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் மொன்றியல் நகரில் நேற்று இருவேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்கச் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் தற்போது நியூயார்க்கில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மொன்றியலில் இரு வேறு தரப்பினரால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மதுரோவின் வீழ்ச்சியை “வெனிசுலாவின் விடுதலை” என ஒரு ஆர்ப்பாட்டத் தரப்பினர் கொண்டாடினர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “சர்வதேச விதிமீறல்” என மற்றொரு தரப்பினர் வன்மையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
