கியூபெக் மாகாணத்தின் கட்டினோ (Gatinea) பகுதியில் ஒட்டாவா ஆற்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Red Cross அமைப்பு அவசர உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
ஆற்று நீர் மட்டம் தற்போது மேலும் உயராமல் ஓரளவுக்குச் சீராகத தொடங்கியுள்ள போதிலும், நூற்றுக்கணக்கான வீடுகள் இன்னும் வெள்ள அபாயத்திலேயே உள்ளன.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஒட்டாவா ஆற்று நீர், இன்று புதன்கிழமை முதல் ஒரு நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் Red Cross அமைப்பிடம் உதவி கோரிப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் உணவு வழங்க 850 boulevard de la Gappe என்ற இடத்தில் உள்ள விளையாட்டு வளாகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக இதுவரை 12 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவசரமாக வெளியேற விரும்புவோர் 311 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், தீயணைப்புப் படையினர் படகுகள் மூலம் அவர்களை மீட்கத் தயாராக உள்ளனர் என அறிவிகப்பட்டுள்ளது.


