கியூபெக்கில் இடம்பெற்ற காக வேட்டை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
கியூபெக் நகரத்திற்கு அருகில் நடைபெறும் வார இறுதி காக வேட்டைப் போட்டிக்கு மாகாணத்தில் இடமில்லை என மொன்றியல் SPCA என அழைக்கப்படும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் , கியூபெக் நகரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள Pont-Rouge ன் பொண்ட்-ரூஜின் வேட்டை மற்றும் மீன்பிடி சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி இந்த அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டு மக்களை எச்சரித்தது.
வெற்றியாளரை அறிவிக்க முன்பு வேட்டைக்காரர்கள் மார்ச் 22 சனிக்கிழமை முழுவதும் தங்களால் இயன்ற அளவு காகங்களைக் கொல்ல வேண்டும் அதிகமான காகங்களை கொள்பவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
மொன்றியல் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கம் வாழ்வாதாரத்தை அல்ல, பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட பொழுதுபோக்கு வேட்டை நடவடிக்கைகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.
“காட்டு விலங்குகளைக் கொல்வதை ஊக்குவிக்கும் மற்றும் செயல்திறனுக்கான பரிசுகளை வழங்கும் வனவிலங்குகளைக் கொல்லும் போட்டிகள் கியூபெக்கில் தடை செய்யப்பட வேண்டும்” என விலங்கு ஆதரவு , சட்டம் மற்றும் அரசு விவகார இயக்குநர் சோஃபி கெயிலார்ட் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த அமைப்பு ஒரு காகத்தின் நுண்ணறிவை எடுத்துரைத்தது எனவும் மற்றும் அத்தகைய வேட்டைப் போட்டிகளைத் தடை செய்யுமாறு கியூபெக் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடை செய்ய வேண்டுமெனவும் தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரெனாட், SPCA-என ழைக்கப்டும் மொன்றியல் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சங்கதின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாகக் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடை செய்ய இருக்கிறார்கள், ஆனால் வேட்டையை நிர்வகிக்க அவர்கள் அங்கு இல்லை,” என்று ரெனாட் தெரிவித்துள்ளார்