உலக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான சந்திப்பு ஒன்று சீனாவில் நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகிய மூன்று தலைவர்களும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் பின்னணியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் சர்வதேச வர்த்தகம், பொருளாதாரத் தடைகள் மற்றும் உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டி உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
அதேவேளை, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் உக்ரைன் போர், ஈரான் விவகாரம், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் வர்த்தகப் போட்டி போன்ற பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவே இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
