ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டன் நகரின் புதிய மேயராகப் பொறுப்பேற்றுள்ள கீனின் லூமிஸ், நகரத்தை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர உறுதியளித்துள்ளார்.
ஏழு புதிய நகரசபை உறுப்பினர்களுடன் தனது நிர்வாகப் பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், அடுத்த 100 நாட்களுக்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே முக்கிய முன்னுரிமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நகரில் இடம்பெற்ற நாஜி ஆதரவு மற்றும் இனவாதப் போராட்டத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள அவர், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஹாமில்டனில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான ஆரம்பகட்ட கணிப்பில் குடியிருப்பாளர்களின் சொத்து வரி 8.2 சதவீதம் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது புதிய நிர்வாகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
