கனடாவின் வூட்ஸ்டொக் பகுதியில், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய டீசல் கசிவு சம்பவம் தொடர்பில் இரு நிறுவனங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளன.
இர்விங் ஆயில் (Irving Oil) மற்றும் கிரான்ட் எண்டர்பிரைசஸ் (Grant Enterprises) ஆகிய நிறுவனங்கள், எரிபொருள் நிலையமொன்றின் நிலத்தடி சேமிப்புத் தொட்டியிலிருந்து டீசல் கசிந்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் சுமார் 2 இலட்சம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் வரையான டீசல் கசிந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கனடாவில் எரிபொருள் சேமிப்பு நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
