கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய சர்வதேச வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்கும் நோக்கில் நான்கு நாடுகளுக்கான முக்கிய சர்வதேசப் பயணத்தை இன்று (11) ஆரம்பித்துள்ளார்.
இதன்படி அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.
சுமார் 36 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தில், நான்கு முக்கிய சர்வதேச உச்சிமாநாடுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அயர்லாந்தில் ஐரோப்பியத் தலைவர்களையும், பிலிப்பைன்ஸில் ஆசியான் நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். குறிப்பாக, ஆசியான் அமைப்புடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது முக்கிய நோக்கமாக உள்ளது.
கம்போடியாவில் நடைபெறும் பிராங்கோஃபோனி உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவர், கியூபெக் முதல்வர் பால் செயிண்ட்-பியர் பிளமொண்டனையும் சந்திக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சீனாவில் நடைபெறும் APEC உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பில் வர்த்தகம், பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் கனடாவில் வெளிநாட்டுத் தலையீடு தொடர்பான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, கனடாவுக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் மார்க் கார்னியின் முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
