மத்திய அரசு வெளியிட்ட புதிய பொருளாதார அறிக்கையானது, உற்பத்தித் திறனை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அதிகப்படியான அரசுச் செலவினங்களிலேயே கவனம் செலுத்துவதாக மொன்றியல் வர்த்தக சபை (CCMM) அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜி7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் உற்பத்தித் திறன் மிகவும் பின்தங்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டிய மொன்றியல் வர்த்தக சபை, வெறும் நிதி ஒதுக்கீடுகள் மட்டுமே பொருளாதார வளர்ச்சியைத் தந்துவிடாது என எச்சரித்துள்ளது.
முறையான சீர்திருத்தங்கள் இல்லாமல் பொருளாதார மந்தநிலையைச் சமாளிப்பது கடினம் என மொன்றியல் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கலான அரசு நடைமுறைகளை எளிதாக்குவதற்கு இந்த அறிக்கையில் எந்தத் திட்டமும் இல்லை என்பதை மொன்றியல் வர்த்தக சபை பிரதானமாகக் குறைகூறியுள்ளது.
