மொன்றியல் நகரின் லிட்டில் பர்கண்டி (Little Burgundy) பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக மொன்றியல் நகரின் 150 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மொன்றியல் தீயணைப்புப் பாதுகாப்புப் பிரிவினரின் தகவலின்படி, இப்பகுதியில் உள்ள டி லெவிஸ் (de Lévis) மற்றும் ஸ்டீ-குனெகோண்டே (Ste-Cunégonde) வீதிகளின் சந்திப்புக்கு அருகில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் கூரையில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ யாரும் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் இல்லை எனவும், எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
