Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெற 52 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெறும் நிலையை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் மத்திய அரசு 52 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
ஒதுக்கீடு
கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மொழிச் சட்டமான மசோதா 96 (Bill 96) அமலுக்கு வந்த பிறகு, ஆங்கில மொழிச் சேவைகள் கிடைக்குமா என்ற அச்சம் ஆங்கிலம் பேசும் சமூகத்தினரிடையே அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த நிதி வழங்கப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தின் பல பகுதிகளிலும் வாழும் ஆங்கிலம் பேசும் சமூகத்தினர் எதிர்கொள்ளும் மொழித் தடைகளை நீக்கி, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அணுகுவதற்கு இந்த நிதி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியின் பெரும்பகுதி டயலாக் மெக்கில் (Dialogue McGill) எனப்படும் திட்டத்திற்குச் செலவிடப்படவுள்ளது.

இத்திட்டம் சுகாதார மற்றும் சமூக சேவை வல்லுநர்கள், முன்ணணிப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இருமொழிகளிலும் பயிற்சி அளிக்கும்.

இதன் மூலம் இருமொழிகளில் பேசக்கூடிய சுகாதார சேவை ஊழியர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி உலக உணவு தினம் இன்று
அடுத்த செய்தி இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின்அடுத்த ‘தலைமை விஞ்ஞானியாக பேராசிரியர் ஜெரோம் டுப்ராஸ் நியமிப்பு

மே 29, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரசு, குறைந்தபட்ச பெட்ரோல் விலையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது!

ஏப்ரல் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கோல்டன் ஸ்கொயர் மைல் கொலை வழக்கில் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு

மார்ச் 21, 2026
கியூபெக்

மொன்றியலில் மாட்டு இறைச்சியில் “ஈ கோலை” பாக்டீரியா தொற்று உள்ளதாக சந்தேகம்

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?