Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டொராண்டோவில் ஹாலோவீன் கொண்டாட்டம் – அச்சத்தைப் போக்கும் அரக்கர் ஓவியக் கண்காட்சி!

அக்டோபர் 25, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ நகரில், ஹாலோவீன் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களின் கற்பனையில் உருவாகும் அரக்கர்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஓவியக் கண்காட்சி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

டொராண்டோவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கேலரி 1065 கலைக்கூடத்தில், கலைஞர் இன்னா கெர்ட்ஸ்பெர்க்கின் Monsters are People Too: 10 Years of Draw Me a Monster என்ற கண்காட்சி நடைபெறுகிறது. நவம்பர் முதலாம் திகதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, அவரது முதல் தனிநபர் ஓவியக் கண்காட்சியாகும்.

கடந்த பத்தாண்டுகளில் அவர் உருவாக்கிய 50 சிறந்த அரக்கர் ஓவியங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் தங்களுடைய அச்சங்கள் மற்றும் கற்பனைகளைச் சில வார்த்தைகளில் விவரிக்கும்போது, அவற்றின் அடிப்படையில் அரக்கர்களை ஓவியங்களாக உருவாக்குவதே இந்தக் கலைஞரின் தனித்துவமான அணுகுமுறையாகும்.

தனது குழந்தைகள் விடுமுறையின்போது சலிப்படைந்த நிலையில், தங்களுக்குத் தோன்றும் அரக்கர்களை வரைந்து தருமாறு கேட்டுக்கொண்டதிலிருந்தே இந்த முயற்சி ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளின் கட்டுப்பாடற்ற கற்பனை தமக்கு மிகச் சிறந்த ஓவியக் கருத்துகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களின் மனதில் நீண்டகாலமாக இருக்கும் அச்சங்களுக்கு ஓர் உருவம் கொடுப்பதன் மூலம், அந்த அச்சங்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிலர் தங்களுடைய கனவுகளில் தோன்றிய பயமுறுத்தும் உருவங்களை ஓவியங்களாகப் பார்த்த பின்னர், அவற்றைக் கண்டு இனி அஞ்ச வேண்டியதில்லை என்ற உணர்வைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளில் சுமார் 2,000 முதல் 2,500 வரையிலான அரக்கர் உருவங்களை வரைந்துள்ளதாகக் கூறும் கெர்ட்ஸ்பெர்க், கலை என்பது மக்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு வழியாகவும் அமைகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான ஓவியப் பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், ஹாலோவீன் தினத்தன்று இனிப்புகளைச் சேகரிக்கப் பயன்படுத்தும் வகையில், தங்களுக்குப் பிடித்த அரக்கர் உருவங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட பைகளை உருவாக்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

அதேவேளை, பெரியவர்களும் தங்களுக்குள் அரக்கர் உருவங்களைப் பரிமாறி உருவாக்குதல் உள்ளிட்ட கலைச் செயற்பாடுகளில் பங்கேற்க முடியும்.

கேலரி 1065-இன் உரிமையாளர் மோனிகா குப்தா தெரிவிக்கையில், உள்ளூர் கலைஞர்களுக்குக் கண்காட்சிகளை நடத்துவதற்கான இடங்கள் போதுமான அளவில் இல்லாத நிலையில், அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 2028ஆம் ஆண்டு அல்லது 2029ஆம் ஆண்டு வரையிலும் கண்காட்சிகளுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாலோவீன் கொண்டாட்டத்தின் திகிலூட்டும் சூழலைக் கலை மற்றும் கற்பனையுடன் இணைக்கும் இந்தக் கண்காட்சி, அச்சத்தைக் கலைப்படைப்பாக மாற்றும் ஒரு வித்தியாசமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றும் திட்டம்
அடுத்த செய்தி சாவகச்சேரியில் வலிதணிப்புப் பராமரிப்பு இல்லம் திறப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 28 தேர்தலில் வாக்களிக்க நீங்கள் தகுதி பெற்றுளீர்களா? தேர்தல் கனடா விடுத்த அறிவுறுத்தல்!

ஏப்ரல் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கிழக்கு கியூபெக்கில் சீல் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 29, 2025
கனடாவிசேட செய்திகள்

உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது!

ஆகஸ்ட் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?