மொன்றியல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வீதிப் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று 13ஆம் திகதி இரவு முதல் அக்டோபர் 14ஆம் திகதி அதிகாலை வரை Décarie நெடுஞ்சாலையின் சில பகுதிகளிலும், A-40 எனப்படும் Métropolitaine நெடுஞ்சாலையின் சில பகுதிகளிலும் வீதி மூடல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், A-15 மற்றும் A-40 நெடுஞ்சாலைகள் சந்திக்கும் Laurentides பரிமாற்றச் சந்திப்பைச் சுற்றியுள்ள சில அணுகுவழிகளிலும் இரவு நேரக் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இடம்பெறவுள்ளன.
இந்த மாற்றங்கள் காரணமாக இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் வழக்கத்தைவிட அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கலாம். எனவும் குறிப்பாக, விமான நிலையத்திற்குச் செல்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் லவால் நோக்கிப் பயணிப்பவர்கள் புறப்படுவதற்கு முன்பு அதிகாரபூர்வ போக்குவரத்துத் தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
