மொன்றியலில் அமைந்துள்ள La Ronde பொழுதுபோக்குப் பூங்காவின் பிரபலமான Goliath ராட்டினம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Georgia மாநிலத்தில் உள்ள Six Flags Over Georgia பொழுதுபோக்குப் பூங்காவில், Goliath என்ற பெயரைக் கொண்ட ராட்டினத்துடன் தொடர்புடைய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மொன்றியாலில் உள்ள La Ronde பூங்கையும் தனது Goliath ராட்டினத்தின் பாதுகாப்பை விரிவாக ஆய்வு செய்வதற்காக அதன் இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
ராட்டினத்தைத் தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆய்வுகள் நிறைவடைந்து, பாதுகாப்பாக இயக்க முடியும் என்ற உறுதி கிடைக்கும் வரை ராட்டினம் மூடப்பட்டிருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
மொன்றியால் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்குச் செல்வதற்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
