கியூபெக் மாகாணத்தில் மானியத்துடன் கூடிய குழந்தைகல் காப்பகங்களின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான “வழியை”க் கண்டுபிடித்துள்ளதாக ஆளும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) அரசு அறிவித்துள்ளது.
கியூபெக்கில், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல், மானியத்துடன் கூடிய குழந்தைகல் காப்பகங்களின் கட்டணம் ஒரு நாளைக்கு 9.65 டொலரிலிருந்து 10.60 டொலராக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வை “நியாயமற்றது” எனக் குறிப்பிட்டுள்ள ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) அரசு, அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தேசிய சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த குடும்ப மற்றும் இளைஞர் நல அமைச்சர் மேகன் பெர்ரி மெலன்கோன் (Méganne Perry Mélançon), இந்தக் கட்டண உயர்வு தமது தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கட்டண உயர்வை மட்டுப்படுத்துவதும் முன்னாள் ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டதுமான, சட்டம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாக உள்ளதை அறிந்தபோது, தாம் அதிர்ச்சியடைந்ததாக அமைச்சர் மெலன்கோன் குறிப்பிட்டுள்ளார்.
