கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர், கனடாவின் அதிகம் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாடு தழுவிய காவல்துறை ஒத்துழைப்புத் திட்டமான ‘போலோ’ (BOLO) மூலம் புதுப்பிக்கப்பட்ட இந்தப் பட்டியல் ரொறன்ரோவில் வெளியிடப்பட்டது.
மொன்றியல் காவல்துறை வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜியான்பியெட்ரோ டிபெரியோ (Gianpietro Tiberio) மற்றும் டிலான் டெனிஸ் (Dylan Denis) ஆகிய இருவரும் மொன்றியலில் நடந்த சம்பவங்களுக்காகத் தேடப்படுகின்றனர்.
53 வயதான டிபெரியோ என்ற நபர், உணவகம் ஒன்றில் செய்யப்பட்ட கொலை தொடர்பான வழக்கிலும், மற்றுமொரு கொலை முயற்சி வழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைக்காகத் தேடப்படுகிறார்.
30 வயதான டெனிஸ், இரண்டு ஆண்டுகளுக்கு சற்று முன்பு அஹுன்ட்சிக்-கார்ட்டியர்வில் (Ahuntsic-Cartierville) பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்திற்காகத் தேடப்படுகிறார்.
இவர்கள் குறித்துத் தகவல் தெரிந்த குடிமக்கள் இருப்பார்கள் என தாம் உறுதியாக நம்புவதாக, பெருங்குற்றப் பிரிவின் தலைவர் மெலனி டுபோன்ட் (Mélanie Dupont) தெரிவித்துள்ளார்.
