Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியினால் உருவாக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது

ஜூன் 27, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” திட்டங்களுக்காக, பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான C-5மசோதா,  செனட்டில் எந்தத் திருத்தமும் இன்றி நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை கனடா எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், விரைவான திட்டங்களைச் செயல்படுத்த கனேடிய மத்திய அரசுக்கு இந்த புதிய சட்டம் அசாதாரண அதிகாரங்களை வழங்குகிறது.

இருப்பினும், இந்த சட்ட முன்மொழிவுக்கு சில பழங்குடியின தலைவர்கள் மற்றும் செனட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுடனான ஆலோசனை செயல்முறையை மோசமாகப் பாதிக்கும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உரையாற்றிய பிரதமர் கார்னி, அமெரிக்காவின் வர்த்தக ஆக்கிரமிப்பிற்கு எதிராக, கனடா பதிலடி கொடுப்பதற்கு இந்த சட்டம் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் போர் ஏற்கனவே கனடாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, வேலை இழப்புகளை ஏற்படுத்தி, ஏற்றுமதிகளைக் குறைத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டம் எத்தகைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், பிரதமர் கார்னி, கிழக்கு மற்றும் மேற்கில் புதிய எரிசக்தி “வழித்தடங்கள்”, புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட துறைமுக வசதிகள், சுரங்கங்கள் மற்றும் பிற வளங்கள் தொடர்பான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு இது பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மசோதா கனேடிய நாடாளுமன்றத்தில் மிக விரைவாக, வெறும் மூன்று வாரங்களில் நிறைவேற்றப்பட்டமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இது, அரசு வழமையாகச் செயல்படும் விதத்தை மாற்றி, விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கார்னியின் முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்த மசோதா லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட செனட்டர்கள் மத்தியிலும் ஆதரவைப் பெற்றது.

இந்த மசோதா, கனேடிய மத்திய அரசின் உள்நாட்டு வர்த்தகத் தடைகளையும் நீக்குகிறது.

இதன்படி ஒரு வர்த்தகப் பொருள் அல்லது வர்த்தக சேவை, மாகாண அல்லது பிராந்திய விதிகளுக்கு இணங்கினால், அது கனடாவின் மத்திய அரசாங்கத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ததாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பொதுமக்களுடனான ஆலோசனைகளை ஆரம்பித்துள்ள கியூபெக் மாகாண அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவுடனான வர்த்தக தொடர்பை துண்டிக்கும் அமெரிக்கா

ஜூன் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு

மே 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
இலங்கைமுதன்மை செய்தி

இஷாரா செவ்வந்தி பாதுகாப்பாக தலைமறைவு – விசாரணையில் தகவல்

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?