Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

போதிய ஆதாரங்கள் இன்றி வழங்கப்பட்ட 67 குடியுரிமைச் சான்றிதழ்களை அதிரடியாக இடைநிறுத்தியது குடிவரவுத் துறை!

ஜூலை 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

67 நபர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கனடா குடிவரவுத் துறை அதிரடியாக இடைநிறுத்தம் (Suspended) செய்துள்ளது. மத்திய அரசின் புதிய வம்சாவளிக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களில், உரிய ஆவண ஆதாரங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறியே, இந்த இடைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் அதிகாரிகளுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் ஏற்பட்ட தெளிவற்ற தன்மையே (Unclear guidance) இந்தத் தவறுக்குக் காரணம் எனக் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), கடந்த ஆண்டு இறுதியில் இயற்றப்பட்ட ‘மசோதா சி-3’ (Bill C-3) சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சுமார் 6,500 வம்சாவளிக் குடியுரிமை விண்ணப்பங்களையும் முழுமையாக மறுஆய்வுக்கு உட்படுத்தியது.

இந்த தணிக்கையின் முடிவில், இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களில் 67 குடியுரிமைச் சான்றிதழ்கள் போதிய ஆதாரங்களின்றி வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டு அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த 67 பேரின் தகுதி நிலையை மீண்டும் உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு, மத்திய அரசாங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி இணையவழிப் பெண் வெறுப்புச் சித்தாந்தங்கள்: இளைஞர்களை மீட்க சிறப்பு நிதி ஒதுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை!
அடுத்த செய்தி ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இருளில் மூழ்கியுள்ள கியூபா.

அக்டோபர் 19, 2024
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 2 மே 2025

மே 2, 2025
கனடாமுதன்மை செய்தி

Line 4 ரயில் பாதையில் ரயில் போக்குவரத்துச் சேவைக்கு தடை

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?