கியூபா நாடானது தற்போது இருளில் மூழ்கியுள்ளது. அந்நாட்டின் பிரதான மின் உற்பத்தி நிலையம் திடீரென செயலிழந்த காரணத்தினால் கியூபாவின் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அங்குள்ள பாடசாலை மற்றும் ஏனைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செயலிழந்த மின் உற்பத்தி நிலையத்தை விரைவில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.