உடலின் வளர்சிதை மாற்றம் மட்டுமின்றி இதயம் மற்றும் இரத்த நாளங்களின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தைரொய்ட் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் உடல் எடை அதிகரிப்பு, தொடர்ந்து சோர்வு, வறண்ட தோல், முடி மெலிதல், மலச்சிக்கல், குளிர்ச்சியை அதிகமாக உணர்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் தைரொய்ட் பரிசோதனை செய்வது அவசியம்.
மேலும் சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதிய உறக்கம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் தைரொய்ட் மற்றும் இதய நலனைப் பாதுகாக்க உதவும்

