Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

அளவிற்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொண்டால் ஏற்படும் ஆபத்துக்கள்.

ஜனவரி 15, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

விற்றமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது சாறு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், எதையும் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். விற்றமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது என்பதோடு, சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்தை வலுப்படுத்தி, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை போக்கும்.

இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ், எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடிப்பது ஏன் நம் உடலுக்கு நல்லதல்ல என்று கூறினார். விற்றமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எலுமிச்சையில் விற்றமின் சி நிறைந்துள்ள நிலையில், இந்த சத்து நம் உடலில் அதிகரித்தால், அது சிறுநீரகம் மற்றும் எலும்பு உள்ளிட்ட பல முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது, எனவே பல மருத்துவர்களும் இதை அளவோடு உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பிரச்சனை: அளவிற்கு அதிகமான விற்றமின்-சி உணவுகளை எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் விற்றமின்-சி சத்தினை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் மற்ற தாதுக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.

எலும்புகளின் அசாதாரண வளர்ச்சி: உடலில் அதிகப்படியான விற்றமின்-சி, அசாதாரண எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்தும். மூட்டுகளில் அசாதாரணமாக வளரும் எலும்புகள் காரணமாக வலி, பலவீனம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

செரிமான பிரச்சனை: அளவிற்கு அதிக விற்றமின் சி காரணமாக, வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கலாம். அதோடு எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீரை குறைவாக குடிக்க வேண்டும்.

வாய் புண்கள்: தேவைக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வாய்வழி திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாயில் வலி, புண்கள், எரிச்சல் ஏற்பட ஆரம்பிக்கும்.

பலவீனமான பற்கள்: சாக்லேட் போலவே, எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால், பற்கள் வலுவிழக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

 

 

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.
அடுத்த செய்தி கனடாவில் பாடசாலை அதிபருக்கு சிறை தண்டனை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

செவ்வாழைப்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ….

மார்ச் 3, 2025
ஆரோக்கியம்

சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மே 2, 2025
ஆரோக்கியம்

நம் உணவில் வாழைக்காயை சேர்த்து கொள்வதால் இத்தனை நன்மைகளா……

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?