கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் ஹாலிபெக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார்.
பாலர் பாடசாலை ஒன்றின் அதிபர் பதின்ம வயது சிறுமியரை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இணைய வழியில் குறித்த அதிபர், சிறுமிகளை துப்பியோகம் செய்தார் எனவும் ஆபாச காணொளிகளை பகிர்ந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் தூண்டல்களை மேற்கொண்டார் என இந்த பாடசாலை அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பிலிப்ஸ் கலஸ்கி என்ற பாடசாலை அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.