மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள்.
மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்து வர சிறுநீரகப் பிரச்சினை, மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்
மல்லிகைப் பூக்களை நீர் விட்டுக் கொதிக்கவைத்து தினமும் அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.
அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும், வாய்ப்புண்களுக்கும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
ஊட்டச்சத்துக் குறைவினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
மல்லிகைப்பூவை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் அதனை அருந்தி வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்துப் போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைக்கும் போது மன அழுத்தமும் குறைவதோடு உடல்சூடும் மாறும்.
இதுபோன்ற பல மருத்துவக் குணங்கள் கொண்ட மல்லிகைப்பூவை பயன்படுத்தி பயன் பெறுங்கள்