இந்த வார இறுதியில் மொன்றியல் நகரின் பல பகுதிகளில் முக்கிய வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மூடல்கள் இடம்பெறவுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Mobility Montréal வெளியிட்ட தகவலின்படி, A-15 Laurentides நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பகுதியில், A-40 மற்றும் Henri-Bourassa Boulevard West பகுதிகளுக்கு இடையில் குறிப்பிட்ட நேரங்களில் முழுமையான மூடல் இடம்பெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் இந்த முழுமையான மூடல் அமுலில் இருக்கும்.
சனிக்கிழமை காலை 7 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை, அதே பகுதியில் மூன்று வழித்தடங்களில் ஒரு வழித்தடம் மூடப்பட்டிருக்கும்.
இதனால் குறிப்பாக Villeray, Saint-Michel மற்றும் Parc-Extension பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

