Instagram பயனர்களின் Online பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில்,Instagram ஒரு அதிரடி புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
Instagram இன் தாய் நிறுவனமான Meta இந்தப் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட பதின்மவயதினர் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி,சிறுவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல் நேரலை ஒளிபரப்புகளைத் தொடங்க முடியாது.
சமூக ஊடக தளங்களின் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் பிரச்சினைகளை தணிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
உலகளவில் சுமார் 54 மில்லியன் பதின்வயதினர் ஏற்கனவே இந்த Teen கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக Meta தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் முதற்கட்டமாக பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமுல்படுத்தப்படும்.
விரைவில், இந்த Teen கணக்குகள் அமைப்பு Facebook மற்றும் Messenger போன்ற மற்ற Meta தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.