Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் யாழில் கைது!

நவம்பர் 10, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் , தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி கைது செய்த போது , காரினுள் இருந்து 5ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
அதேவேளை காரின் இலக்க தகடு போலியானது எனவும் , குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் ,  சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , பெண்ணொருவருடன் பிரதான சந்தேநபர்கள் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் , கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவரை கைது செய்யுமாறு கொழும்பில் இருந்து , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருப்பது தொடர்பிலான தகவல் , பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து வீதியில் காரை மடக்கி சந்தேக நபரை கைது செய்தனர்.
அதன் போது காரினுள் 5ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த நபர் உடுவில் பகுதியை சேர்ந்தவர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் சிலவற்றுடன் தொடர்புடையவர் , வன்முறை கும்பல் ஒன்றுடன் சேர்ந்து இயங்குபவர் என தெரிய வந்துள்ளது.
அத்துடன் காரின் இலக்க தகடும் போலியானது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதேவேளை ,போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டில் யாழ் , நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பின்னர் , கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு , நீதிமன்ற அனுமதியுடன் சந்தேக நபரை கொழும்பு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய செய்தி டில்லி குண்டுவெடிப்பின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள்
அடுத்த செய்தி கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எருது இறைச்சியுடன் கைதான சந்தேகநபர்கள்

ஏப்ரல் 13, 2026
இலங்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!

மார்ச் 11, 2025
இலங்கை

சடுதியாக குறைவடைந்த முட்டையின் விலை!

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?