Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

20 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர் பாலியல் குற்றங்கள் – 51 வயது நபர் கைது

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகரில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான ஆயுதம் தாங்கிய பாலியல் தாக்குதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் 51 வயதுடைய நபர் ஒருவர் கியூபெக் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிநோ நகருக்கு வடக்கே உள்ள போமன் பகுதியைச் சேர்ந்த ஜோனாதன் பொய்ரியர் (Jonathan Poirier) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது மொத்தம் 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், சிறாார்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இந்த குற்றச் செயல்கள் புரியப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய பாலியல் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, கடத்தல், கொலைப் அச்சுறுத்தல் மற்றும் உடற்காயங்களை ஏற்படுத்துவதாக அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை உருவாக்கியதாகவும் இவர் மீது மேலதிகக் குற்றச்சாட்டுக் சுமத்தப்பட்டுள்ளது.

கியூபெக் நகர பொலிஸாரின் பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்பக் குற்றப் பிரிவு, மாகாணப் பொலிஸார் மற்றும் தடயவியல் மருத்துவ ஆய்வகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் புதிய சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
அடுத்த செய்தி CSIS உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அமைப்பு கவலை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

எம்பிரெஸ் தியேட்டர் மறுசீரமைப்புத் திட்டம்: விபரங்களை வெளியிட அவசர வலியுறுத்தல்!

ஜூலை 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் காணாமல்போகும் நிலை அதிகரிப்பு.

ஜூன் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து “மார்வா ரிஸ்கியை” நீக்கினார் பாப்லோ ரோட்ரிக்ஸ்!

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?