மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் TMVP கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் CIDயினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வழக்கின் மற்றொரு சந்தேகநபரான லண்டனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ‘பொலிஸ் பாய்ஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக CID நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
