Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(10) சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு சாட்சியமளிக்க என்னை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) அழைப்பு விடுத்திருந்தனர்.

குறிப்பாக, 51 சைனா பஜார் (China Bazar) கடைகளை வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

இதில் 49 கடைகள் முறையான கொள்வனவு நடைமுறை சட்டத்தை (சட்டம் 80:46) மீறி, எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு சுமார் 5 கோடி 31 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் CID அதிகாரிகள் பரிசீலித்த போது, ஊழல் நடை பெற்றுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கணக்காய்வாளர் நாயகத்தின் (General Auditor) அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக வும், வாக்குமூலம் வழங்குவதற்காகவும் என்னை மீண்டும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளார்.விசாரணைக்கு தேவையான சில மேலதிக ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுக்கவும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பது எமது இலக்காகும்.என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது
அடுத்த செய்தி மியன்மாரின் புதிய ஜானாதிபதியாக மின் ஹலைங் தெரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ படையிலிருந்து போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மண்டைதீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

செப்டம்பர் 22, 2025
இலங்கை

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆகஸ்ட் 1, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 பிப்ரவரி 2026

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?