Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா

மே 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்கு பிள்ளையால் கையளிக்கப்பட்டது.

அதனை யாழ். மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு பாரம்பரிய முறைப்படி பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா செப்டெம்பர் 09ஆம் திகதியும், மறுநாள் 10ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!
அடுத்த செய்தி யாழில் முகமூடி கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதியவர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

செப்டம்பர் 18, 2026
இலங்கை

கைதானார் ஷமீந்திர ராஜபக்ஷ

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது…

ஏப்ரல் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?