Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர்.

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கடற்றொழில்,அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடலில், அமைச்சர் இ.சந்திரசேகர் குறிப்பிடுகையில்,

தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிமொழி அளித்துள்ளனர்.
இச்சிறைச்சாலைகளில் சிறிதளவு நெரிசலான நிலை காணப்பட்டாலும், அதனைத் தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய சிறைச்சாலைகளைப் போலல்லாது, இங்கு கைதிகளுக்குத் தொழிற்கல்வி, கல்வித் தொடர்ச்சி, நூலக வசதிகள் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இச்சிறைச்சாலைகள் தற்போது ஒரு ‘கலாசாலையாக’ மாற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் தற்போது சிறைச்சாலைகளில் ஏற்படும் கலவரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதால், எமது மாகாணத்திலும் எத்தகைய எதிர்பாராத சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் விசேட பாதுகாப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் தயாரித்து வழங்கிய மேலதிக அறிக்கை நீதி அமைச்சரிடம் அனுப்பி வைத்துத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார்

இந்த அவசர கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512ஆவது கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி CAQ-வின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்” – லிபரல் தலைவர் எச்சரிக்கை.
அடுத்த செய்தி பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் ஆரோக்கிய உணவு விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுனரிடம் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குருக்கள் மடம் மனிதப் புதை குழி அகழ்வுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

அகற்றப்படும் சர்ச்சையை ஏற்படுத்திய மொன்றியல் நகர மண்டப வரவேற்புப் பலகை!

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

மே 24, 2026
இலங்கை

சாணக்கியன் எம்.பிக்கு புதிய பதவி.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?