Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் ஆரோக்கிய உணவு விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுனரிடம் கோரிக்கை

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ‘தேசிய போசாக்கு மாதம்’ மற்றும் ‘ENOUGH’ பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன் தாய்மார்க் கழகங்கள் இணைந்து நடாத்திய போசாக்குக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நேற்றைய தினம் புதன்கிழமை  வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. அதன் போதே ஆளூனரிடம் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சங்கானையின் 35 தாய்மார்கள் கழகங்களாலும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் வழிகாட்டலிலும் பனைசார் உணவுகள், கடல்சார் உணவுகள், சிறுதானியங்கள், மரக்கறி இலைவகைகள், பால் மற்றும் முட்டைசார் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிறப்பம்சமாக பாடசாலை சிற்றுண்டிச் சாலை மாதிரி அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், கோழி, ஆடு, தாரா, காடை வளர்ப்பு போன்ற விலங்கு வேளாண்மை மூலமான பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் இரசாயன உரங்களற்ற சுகவாழ்வுத் தோட்ட முறைகளும் விளக்கமளிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநரிடம், வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்,

சங்கானை பிரதேச மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவது மற்றும் அதன் ஆளணிப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இரு பிரதான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன

குறித்த நிகழ்வில் தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்புக் கலை பயிற்சிப் பரீட்சையில் தேச்சிபெற்ற 400 பேருக்கு ஆளுநர் மற்றும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆரம்ப மழலைப் பராமரிப்புத் தொடர்பான இறுவட்டும் வெளியிடப்பட்டு ஆளுநரால் உத்தியோகபூர்வமாகக் கைளிளிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் சிறப்பு விருந்திரனாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலாளர்  உ.கவிதா உள்ளிட்டவர்கள்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில் அமைச்சர்.
அடுத்த செய்தி மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சடுதியாக குறைவடைந்த முட்டையின் விலை!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

ஜூலை 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

ஜூன் 11, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 8 மே 2025

மே 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?