மொண்ட்ரியால் வெஸ்ட் பகுதியில் அமைந்துள்ள பிரபல ‘ராயல் வெஸ்ட் அகாடமி’ (Royal West Academy) பாடசாலைக்கு அருகிலுள்ள ஆபத்தான வீதிச் சந்திப்பில், பாடசாலை போக்குவரத்து வழிகாட்டியை (Crossing Guard) மீண்டும் நிரந்தரமாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெற்றோர்களும் உள்ளூர் மேயரும் காவல்துறையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அவென்யூ (Westminster Avenue) மற்றும் ஏன்ஸ்லி வீதி (Ainslie Road) சந்திக்கும் பகுதியில் மாணவர்கள் தொடர்ச்சியாக வாகன விபத்துக்களுக்கு உள்ளாகி வந்ததையடுத்து, பெற்றோர்களின் தீவிர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் கல்வி ஆண்டு முடியும் வரை மொண்ட்ரியல் காவல்துறையினரால் (SPVM) தற்காலிகமாகப் போக்குவரத்து வழிகாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், புதிய கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளமை பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இது குறித்து மொண்ட்ரியல் காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், 2025-2026 கல்வி ஆண்டில் ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே விதிவிலக்கு அடிப்படையில் போக்குவரத்து வழிகாட்டி நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.



