Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி விடுத்த அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடிய ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DND) பணித் தளங்களில் நடைமுறையிலுள்ள மொழிப் பயன்பாட்டு வழிகாட்டல் தொடர்பாகச் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அது குறித்து விரிவான மீளாய்வை மேற்கொள்ளுமாறு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) உத்தரவிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த வழிகாட்டல், பிரெஞ்சு மொழிக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மொழி உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் அமைச்சர் டேவிட் மெக்கின்டி, இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கவலைகளைத் தாம் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

“பணித்தள மொழித் தேவைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், தற்போதைய அணுகுமுறை செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பாதுகாப்புப் படையினரின் மொழி உரிமைகளை மதிக்கிறதா என்பதையும் இந்த மீளாய்வு விரிவாக ஆராயும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு முழுவதிலும் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொதுமக்களுக்கான சேவைகள், இராணுவக் குடும்பங்களுக்கான உதவிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு உத்தியோகபூர்வ மொழிகளிலும் தடையின்றி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியல் மாநகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம்
அடுத்த செய்தி பிரதமர் மார்க் கார்னிக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள கலாசார மற்றும் கலை அமைப்புகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

இனவாத மற்றும் நியோ-நாஜி கொள்கைகளைப் பரப்பும் கனடிய ஆயுதப் படை வீரர்கள்

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்உலகம்

எமது தேசம் இலக்கு வைக்கப்படும்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை – கனேடிய அமைச்சர்கள்

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

சஸ்காச்சுவான் சட்டமன்றம் முன்பு திரண்ட சுகாதாரப் பணியாளர்கள்…

ஏப்ரல் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது -கனேடிய பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?