Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பிரதமர் மார்க் கார்னிக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள கலாசார மற்றும் கலை அமைப்புகள்

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெற்ஃபிளிக்ஸ் (Netflix) உள்ளிட்ட வெளிநாட்டு டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் கனடியக் கலை மற்றும் கலாசாரப் படைப்புகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற சட்டரீதியான நிபந்தனையை இரத்து செய்ய வேண்டாம் என, சுமார் 50 கலாசார மற்றும் கலை அமைப்புகள் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) கூட்டு முறையீடு மூலம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் கனடாவில் ஈட்டும் வருவாயில் 15 சதவீதத்தை கனடிய உள்ளடக்கப் படைப்புகளுக்கு (Cancon) நிதியாக வழங்க வேண்டும் என கனடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு (CRTC) முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

 இருப்பினும், வாடிக்கையாளர்களின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கிலும், அமெரிக்க வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்த விதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஆண்டிற்கு 600 மில்லியன் டொலர் அரச நிதியை நேரடியாக வழங்கப் போவதாக கூட்டாட்சி அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது.

இவ்வாறான அரச நிதியுதவி, சட்டரீதியாகப் பிணைக்கப்பட்ட பங்களிப்பு முறைமைக்கு ஒருபோதும் மாற்றீடாக முடியாது என சுட்டிக்காட்டி, பிரதமர் மார்க் கார்னி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) ஆகியோருக்கு, 50 அமைப்புகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

கனடிய சுயாதீன தயாரிப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய ஊடகத் தயாரிப்பாளர்கள் சங்கம் (CMPA), நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் திரைப்பட விழா அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி விடுத்த அறிவிப்பு
அடுத்த செய்தி ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஜூலை 20, 2026
கனடா

கனேடிய மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் கேப்பிரிட்டன் பகுதியில் காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!

ஜூலை 20, 2025
கனடா

புனித ஜெரோம் கத்தோலிக்க தேவாலய பாதிரியார் மீது பதிவான பாலியல் வழக்கு

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?