Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பெருநகரப் பகுதியில் இந்த வாரயிறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மற்றும் வீதிப் புனரமைப்புகள் காரணமாகக் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெஸ்ட் ஐலண்ட் (West Island) பிராந்தியத்திற்கான ‘ஆர்.இ.எம்’ இலகுரயில் சேவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் பெருநகரப் பகுதியில் அன்சே-ஆ-ல்’ஓர்ம் (Anse-à-l’Orme) மற்றும் போவா-பிராங்க் (Bois-Franc) நிலையங்களுக்கு இடையிலான இலகுரயில் சேவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் காலை 5:30 மணி முதல் காலை 10:00 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக நிறுத்தப்படவுள்ளன.

வாரயிறுதி நாட்களில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், கூடுதல் நேர ஒதுக்கீட்டுடன் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் கியூபெக் போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில் சேவை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளன.

ரயில்வே கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் எதிர்கால விமான நிலைய இணைப்புப் பாதைகளுக்கான முதற்கட்ட தொழில்நுட்பச் சோதனைகள் காரணமாகவே இந்த சேவைத் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக பிரத்தியேக மாற்றுப் பேருந்துகள் (Shuttle buses) இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
அடுத்த செய்தி மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

அதிவேக சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிப்பு

மார்ச் 18, 2026
கியூபெக்

கோயலிஷன் அவெனிர் கியூபெக் கட்சியின் இறுதிப் பரப்புரை

ஏப்ரல் 11, 2026
கியூபெக்

மொன்றியலில் பிரெஞ்சு மொழி வீழ்ச்சியடைந்து வருகிறது – பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 7, 2026
கியூபெக்

சட்டத்தரணி மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு கட்டுப்பாடுகளுடன் விடுதலை.

ஆகஸ்ட் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?