மொன்ட்ரியல் – லாங்கெயில் நகரின் செயின்ட்-ஹியூபர்ட் பகுதியில், இன்று வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் 88 வயது முதியவர் ஒருவரும் அவரது 86 வயது மனைவியும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முதியவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்திலேயே ஒரு பெண் கைது செய்யப்பட்டு, சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முதியவரின் மனைவிக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
