Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி மெலினா ஃபிராட்டோலின் (Melina Frattolin) அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், அவர் காணாமல்போனதாகப் புகாரளிக்கப்படுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே அவரது கைத்தொலைபேசி முழுமையாகச் செயலற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தந்தையான 46 வயது லூசியானோ ஃபிராட்டோலின் (Luciano Frattolin) மீதான இரண்டாம்  நிலைக்கொலை மற்றும் உடலை மறைத்தமை தொடர்பான வழக்கு விசாரணை, நியூயோர்க்கின் எசெக்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் (Essex County Court) நடைபெற்று வருகின்றது.

நியூயோர்க் மாநிலப் பொலிஸாரின் மின்னணுச் சாதன பகுப்பாய்வாளர் டேவிட் ஹங்கர்ஃபோர்ட் (David Hungerford) நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, சிறுமி மெலினா தனது தந்தையுடன் நியூயோர்க் வந்திருந்த வாரம் முழுவதும் கைபேசியில் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்திவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சிறுமி காணாமல்போனதாகக் கூறப்பட்ட நாளன்று பிற்பகல் 4:30 மணியளவில், அவர் தனது தாயார் காளி கலாணிஸுக்கு (Kali Galanis) ” Selfie” எனப்படும் சுயபட காணொளியை (Selfie video) அனுப்பியுள்ளார்.

அக்காணொளியில் அச்சிறுமி சிரித்தபடியும் தனது முடியைக் கோதியபடியும் காணப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் உணவகம் ஒன்றில் சிறுமி செலவிட்டதாகவும், பிற்பகல் 5:30 மணியளவில் அவரது கைபேசி கடைசியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தரவுகள் காட்டுகின்றன.

எனினும், அன்றைய தினம் இரவு 10:00 மணியளவிலேயே வெள்ள நிற வேனில் வந்த இருவர் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக லூசியானோ பொலிஸில் புகாரளித்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 9:00 மணியளவில் சிறுமியின் தாயார் “என்னை அழை” (“Appelle moi”) எனப் பல குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அதிகாலை 3:00 மணி வரை தொடர்ச்சியாகத் தொடர்புகொள்ள முயன்றமையும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

குறித்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின், டைக்காண்டிரோகா (Ticonderoga) பகுதியில் உள்ள சதுப்புநிலக் குளமொன்றில்  பிணமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை
அடுத்த செய்தி வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் கிழக்கில் கொக்கெய்ன் விநியோக வலையமைப்பு காவல்துறையால் முறியடிப்பு

ஜூலை 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 13, 2026
கியூபெக்

REM இன் அனைத்து இயக்கங்களையும் கண்காணிக்கும் பிரம்மாண்ட செயல்பாட்டு மையம் திறப்பு

மே 11, 2026
கியூபெக்

கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?