கியூபெக் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு பழங்குடி அமைப்புகள் வனத்துறை நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளன.
கியூபெக்கில் உள்ள இரண்டு பழங்குடி அமைப்புகளே இவ்வாறு, பல வனத்துறை நிறுவனங்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகளை அனுப்பி வைத்துள்ளன.
அங்கீகரிக்கப்படாத பழங்குடிப் பிரதேசங்களில் இருந்து தங்கள் தொழிலாளர்களையும், உபகரணங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்த அறிவிப்புகள் கோருகின்றன.
கியூபெக் மாகாண அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட வனத்துறை சீர்திருத்தத்திற்கு நேரடியான பதிலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வனத்துறை சீர்திருத்தத்தை பழங்குடி சமூகங்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.