ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் நகரின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற 25 வயதுடைய பெண் ஒருவரின் மரணம் ”பெண்பால்நிலை சார் படுகொலை” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொலைச் சம்பவத்தை விவரிக்க இந்த வார்த்தையை காவல்துறை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என, தெரியவருகின்றது.
இந்த மரணம் தொடர்பாக, 26 வயதுடைய ஹாட்டன் ஹார்பர்-ப்ரூவர் மீது, முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டினுள் நுழைந்த போது, அவர் காயங்களுடன் காணப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்dஅ போதும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பு தொடர்பில் ஹார்பர்-ப்ரூவர் என்பவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.