கனடாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமான அல்டோ அதிவேக ரயில் (Alto High-Speed Rail – HSR) முன்முயற்சியின் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, முக்கியமான ஒட்டாவா – மொன்றியால் இணைப்பு ரயில் பகுதி முதலாவதாக உருவாக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கியூபெக் சிட்டி முதல் டொராண்டோ வரை பிரத்தியேகமான, மின்மயமாக்கப்பட்ட பயணிகள் ரயில் பாதையை உருவாக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கட்டமைப்பு, மொன்றியல் மற்றும் டொராண்டோ இடையேயான பயண நேரத்தை தற்போதுள்ள VIA ரெயிலின் ஐந்து மணி நேரத்திலிருந்து சுமார் மூன்று மணி நேரமாகக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
