கியூபெக் மாநிலத்தின் அரசாங்கம், Bill 9 என்ற பெயரில் புதிய மதச்சார்பின்மை மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தச் சட்டத்தில், பொது நிறுவனங்கள் பிரத்தியேகமாக ஒரு மதத்தின்பாரம்பரியத்தின் அடிப்படையில் மட்டுமே உணவுகளை வழங்குவதைத் தடுக்கும் ஒரு முக்கியமான விதி சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது, யூதர்களின் கோஷர் (Kosher) அல்லது இஸ்லாமியர்களின் ஹலால் (Halal) உணவுகளை மட்டுமே வழங்குவது தடை செய்யப்படலாம்.
இந்த புதிய விதியின்படி, மருத்துவமனைகள், பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் (daycares) மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பொது நிறுவனங்கள் மதம் சார்ந்த உணவுகளை வழங்கலாம். ஆனால், அவர்கள் பிற மதச்சார்பற்ற உணவு விருப்பங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்கான சட்டம் என்ற தலைப்பிலான இந்த மசோதா, இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட மதச்சார்பின்மைச் சட்டங்களை விரிவாக்கம் செய்கிறது.


